இடுகைகள்

முக்கிய செய்திகள்

வடக்கு சிவகாமியாபுரத்தில் செப்டிக் டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்ட ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள்

படம்
  வடக்கு சிவகாமியாபுரத்தில்  செப்டிக் டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்ட ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள்  ஆலங்குளம். மே. 19      ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமியாபுரத்தில் செப்டிக் டெங்கில்  தவறி விழுந்த கன்றுக்குட்டியை ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.  செப்டிக்டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்கும் காட்சி வீடியோ மற்றும் புகைப்படம்           தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமியாபரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் வீட்டின் பின் புறம் புதியதாக செப்டிக் டேங் கட்டியுள்ளார். இது சரியாக நிலையில் இருந்தாக கூறப்படுகிறது.       இந்தநிலையில் அந்த பகுதியில் மாடுகள் ஒன்றுக்கொண்டு சண்டையிட்ட போது கன்றுக்குட்டி ஒன்று செப்டிக் டேங்கில் தவறிவிழுந்தது. இது குறித்து தகவல் அறிந்தும் ஆலங்குளம் நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு கட்டி செப்டிக் டேங்கில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை லாகவமாக மீட்டனர். உரிமையாளரிடம் கன்று ஒப்படைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் ஆலங்குளம் தீயணைப்பு வீரர்களை பாராட்டினர். 

ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மின்வாரியம் பெண் ஊழியரிடம் செயின் பறித்த வழிப்பறி கொள்ளையன் கைது-

படம்
  ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மின்வாரியம் பெண் ஊழியரிடம் செயின் பறித்த வழிப்பறி கொள்ளையன் கைது-   9 பவுன் செயின் மீட்பு :  ஆலங்குளம்- மே.19.   தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சாந்தி (45). இவர் அடைக்கலப்பட்டிணத்தில் உள்ள மின்வாரியம் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வசூலான மின்கட்டணம் பணத்தை  ஆலங்குளம் வங்கியில் செலுத்துவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஆலங்குளம் அருகே அத்தியூத்து விலக்கு தனியார் கல்லூரி அருகே வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் மின்வாரிய ஊழியர் சாந்தி அணிந்திருந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றார்.     இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.    இந்த நிலையில் நேற்று இர வு  ஆலங்குளம் நெட்டூர் சாலை குருவன்கோட்டை ;அருகே ஆலங்குளம் காவல் ஆய்வாளர் மாதவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது

சென்னையில் இஷின்ரியூ கராத்தே சார்பில் 47 வது கருப்பு பட்டை மற்றும் டான் சான்றிதழ் வழங்கும் விழா

படம்
சென்னையில் இஷின்ரியூ கராத்தே சார்பில் 47 வது கருப்பு பட்டை மற்றும்    டான் சான்றிதழ் வழங்கும் விழா கராத்தே கழகம் தலைவர் ஷீகான் ஹூசைனி வழங்கினார்.  ஆலங்குளம். மே. 19    அகில இந்திய கராத்தே கழகம் சார்பில் சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில்  47 வது ஆண்டு கருப்பு பட்டை மற்றும் டான் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அகில இந்திய கராத்தே கழகம் தலைவர் ஷீகான் ஹூசைனி தலைமை தாங்கினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.       இந்த போட்டியில்; தென்காசி மாவட்டம் ஹ_ சாஷாஹ_ இஷின்ரியூ கராத்தே ஆலங்குளத்தை சேர்ந்த சென்சாய் கோபி மற்றும் 2 மாணவர்கள் பங்கேற்றனர். சென்சாய் கோபி 5 ம் நிலை கருப்ப பட்டையும், மாணவர்கள் சுபாஷ் 1ம் நிலை கருப்பு பட்டையும். சங்கர் சர்மா இரண்டாம் நிலை கருப்பு பட்டையும், அதற்கான டான் சான்றிதழையும் பெற்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.       கருப்பு பட்டை மற்றும் டான் சான்றிதழ்களை பெற்ற சென்சாய் கோபி மாணவர்களை ஹ_ சாஷாஹ_ இஷின்ரியூ கராத்தே மூத்த சென்சாய்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

நெல்லை ஆயுதப்படை அலுவலகத்தில் பெண் காவலர்களுக்கு ஓய்வு அறை திறப்பு விழா காவல் ஆணையர் மூர்த்தி பங்கேற்பு

படம்
  நெல்லை ஆயுதப்படை அலுவலகத்தில்  பெண் காவலர்களுக்கு  ஓய்வு அறை திறப்பு விழா -  காவல் ஆணையர் மூர்த்தி பங்கேற்பு திருநெல்வேலி மே.18.       நெல்லை மாநகர ஆயுதப்படை அலுவலக கட்டிடத்தில் புதிதாக காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினருக்கு படிப்பகம், உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பெண் காவலர்களுக்கு ஓய்வறை ஆகியவற்றை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி  குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.        இந்த நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (கிழக்கு) ஆதர்ஷ் பசேரா  வரவேற்புரை ஆற்றினார்.   காவல் துணை ஆணையர் (மேற்கு) V.கீதா நன்றி கூறினார்.  காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்கள் கலந்துகொண்டனர்..

Munnar elephant rides

படம்
  Munnar. May.17 Munnar elephant rides are park experiences, not wild safaris. Carmelagiri Elephant Park offers short rides or elephant interaction experiences. Choose reputable parks like Carmelagiri with good elephant treatment. Asian elephants are the species you'll encounter, known for intelligence and gentleness. Fun fact: An elephant's trunk has a whopping 40,000 muscles!

பூலாங்குளத்தில் நடிகர் ராமராஜன் ரசிகர் மன்றம் ஆலோசனை கூட்டம்

படம்
  பூலாங்குளத்தில்  நடிகர் ராமராஜன் ரசிகர் மன்றம் ஆலோசனை கூட்டம் :  எம். எஸ்.சுப்பையா பங்கேற்பு ஆலங்குளம் மே 17 ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தில்  நடிகர் ராமராஜன் ரசிகர் மன்றம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  .வருகின்ற மே.23ம் வியாழக்கிழமை மக்கள் நாயகன் ராமராஜன் Ex MP நடிப்பில் உருவான சாமானியன் திரைப்படம் வெளிவருவதை முன்னிட்டு தென்காசி மாவட்ட மக்கள் நாயகன் R.ராமராஜன் Ex MP  தலைமை ரசிகர்மன்ற சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் K.S செல்வமஹால் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.       மாநில அமைப்பு செயலாளர் எம் எஸ் சுப்பையா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.  மாவட்ட செயலாளர் செல்வன் வரவேற்றார்.   இதில் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்கேற்றனர்.  நடிகர்  ராமராஜன்  வெற்றிப் படைப்பான சாமானியன் திரைப்படத்தை  வெற்றி பெற வைப்பது, முதல்நாள் ரசிகர் மன்றம் காட்சியில் அனைவரும் பங்கேற்பது, சாமானியன் திரைப்படத்தை  விளம்படுத்துவது கஉள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

குற்றால வெள்ளப் பெருக்கினால் அண்மைக்காலமாக நிகழும் மரணங்கள்.!

படம்
குற்றால வெள்ளப் பெருக்கினால் அண்மைக்காலமாக நிகழும் மரணங்கள்.!     உடனடி தடுப்பு நடவடிக்கைகள் தேவை.! டாக்டர்.கிருஷ்ணசாமி  அறிக்கை: தென்காசி - மே.17-  புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தென்காசி. மே. 17       பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். குற்றாலத்தில் உள்ள பழைய அருவி, பிரதான அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படக்கூடிய திடீர் மழையாலும் வெள்ளத்தாலும் அண்மைக்காலமாக மரண சம்பவங்கள் நிகழ்வது அனைவருக்கும் கவலை அளிக்கக் கூடியது.       குற்றாலத்தில் மே மாதம் முதல் அக்டோபர், நவம்பர் வரையிலும் ஐந்தாறு மாதங்களுக்கு தொடர்ச்சியாகவும், விட்டுவிட்டு மழையும் சாரலும் வருவது வழக்கம். பொதுவாக பெரும் மழை, வெள்ளக் காலகட்டங்களில் அருவிகள் பெருக்கெடுத்து விழுகின்ற பொழுது பாதுகாப்புக் கருதி யாரையும் குளிக்க விடாமல் காவல்துறை தடுத்து விட முடிகிறது.       இது போன்ற பருவமற்ற காலகட்டங்களில் குறைந்த அளவு தண்ணீர் வருகின்

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் -

படம்
  மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற  தொடர் போராட்டம் நடத்தப்படும்      டி.பி.வி.வைகுண்டராஜா அதிரடி : T.P.V. வைகுண்டராஜா ஆலங்குளம், மே 17:     திருநெல்வேலி-தென்காசி சாலை மாறாந்தையில் அமைக்கப்பட்டுவரும் சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான  டி.பி.வி.வைகுண்டராஜா தெரிவித்தார்.   ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் துத்திகுளம் சாலையில் உள்ள எம்.ஆர்.எஸ். வள்ளி மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்தகூட்டத்திற்கு, ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.   துணைச் செயலாளர் ஆசீர்வாதம், ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் உரிமையாளர் டி.பி.வி.கருணாகரராஜா, கார்த்திகா சில்க்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி.இரத்தினசாமி, தொழிலதிபர்கள் கிறிஸ்டோபர், எஸ்.கே.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கூடுதல் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.  ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ஏ.உதயராஜ், வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் வேலுச்சாமி, சங்க கெளரவ ஆலோசகர் ஜான்ரவி, எம்.ஆர்.எஸ்.

ஆலடிப்பட்டி கோவில் கொடை விழாவில் கடைகளில் நூதன மோசடி : 4 பேர் கை கைது

படம்
  ஆலடிப்பட்டி கோவில் கொடை விழாவில் நூதன  மோசடியில் ஈடுபட்ட 4 பேர் அதிரடி கைது - கார் பறிமுதல் ஆலங்குளம்-மே. 11    ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி கோவில் கொடை விழாவில் கடைகளில் 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்பது போல நடித்து வியாபாரிகளிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 2 ஜோடி தம்பதிகளை போலீசார் கைது செய்தனர். பணம், மோசடி கும்பலின் கார் பறிமுதல்     தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் சுடலைமாடன் சுவாமி கோவில் உள்ளது.  இந்த கோவில் கொடை விழா கடந்த 8ம் தேதி புதன் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவிலில் நேற்று இரவு சாமக் கொடை விழாவை காண ஆயிரகணக்கான உள்ளுர் வெளியூர் பக்தர்கள் இங்கு திரண்டனர்.   கோவிலில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பக்தர்கள் போல நடித்து செயின் பறிப்பு உள்ளிட்ட பெரிய அளவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த மதுரை, உசிலம்பட்டி அய்யன்கோவில்பட்டியை சேர்ந்த 2 ஜோடி தம்பதிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.    மதுரை உசிலம்பட்டி அய்யன்கோவில்பட்டியை சேர்ந்த பிச்சையா (59) இவரது மனைவி மொக்கத்தாய், அதே பகுதியை சேர்ந்த நல்லகுரும்பன் (60). இவரது மனைவி முனியம்மாள

ஆலங்குளம் பேரூராட்சி கட்டிடத்தை சீரமைத்து அதே இடத்தில் இயங்க நடவடிக்கை

படம்
  ஆலங்குளம் பேரூராட்சி கட்டிடத்தை சீரமைத்து அதே இடத்தில் இயங்க நடவடிக்கை  தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  ஆலங்குளம். மே. 9        தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆலங்குளம் நகர செயலாளரும், சமூக ஆர்வலருமான எம்.எஸ். சுப்பையா கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.          தென்காசி மாவட்டத்திற்கு அதிக வருவாய் வழங்கும் நகரமாக ஆலங்குளம் பேரூராட்சி உள்ளது. ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. பழமையான இந்த கட்டிடம் வலுவிழந்து பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.         இதனால் பேரூராட்சி அலுவலகம் தற்செயலாக ஆலங்குளம் அம்பாசமுத்திரம் சாலைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அமைந்துள்ள பேரூராட்சி அலுவலகம் ஆலங்குளம் நகரின் முக்கிய பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் குடிநீர் கட்டணம் வீட்டு வரி, தொழில் நிறுவனங்கள் தொழில் வரி செலுத்த மிகவும் எளிதாக உள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகம் ஆலங்குளம் அம்பை சாலைக்கு இடமாற்றம்; செய்யப்பட்டால் பொதுமக்கள் நான்கு வழி சாலையை கடந்து செல்ல

ஆலங்குளத்தில் 8 வது வார்டு திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

படம்
  ஆலங்குளத்தில் 8 வது வார்டு திமுக சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல்            சிவபத்மநாதன் திறந்து வைத்தாா்                                             -------------------------------------- ஆலங்குளம். மே. 9-        கோடைகாலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் ஆலங்குளம் 8 வது வார்டு திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜதுரை ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி 8 வது வார்;டு கவுன்சிலர் அன்னக்கிளி ராஜதுரை தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜதுரை வரவேற்றார்.        முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி. பழஜூஸ், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.       இந்த நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், முன்னாள் கவுன்சிலர் சுதா மோகன்லால், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் மாவட்ட பொறுப்பு

கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

படம்
  கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்  தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஜெயபாலன் திறந்து வைத்தாா் ஆலங்குளம். மே. 9-        தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் சிவன் பாண்டியன். பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன நகர பொருளாளர் தெய்வேந்திரன்; ஆகியோர் முன்னிலை வகித்தனர்.       தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி உள்ளிட்ட குளர்பானங்கனை வழங்கினார்.         இந்த நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி  இராஜாமணி, கவுன்சிலர்கள் ஜெயசித்ரா, இசக்கி, பொன் செல்வன்;, ஒன்றிய இளைஞரணி கோமு, முன்னாள் நகர செயலாளர் ராமசாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி இளைய பெருமாள், கருமடையூர் பாரதி ராஜா, மூலக்கரையூர் மாரி செல்வம், பாலசுப்பிரமணியன், கலைச்சாமி, வார்டு செயலாளர் மாடசாமி, மாரியப்பன். காங்கிரஸ் கவ

கீழக்கலங்களில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

படம்
  கீழக்கலங்களில் திமுக சார்பில்                                  நீர் மோர் பந்தல்                                     முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார் ஆலங்குளம். மே. 9     ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் கீலகலங்கலில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.     தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் கீலகலங்கலில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் செல்வக்கொடி ராஜாமணி ஏற்பாட்டில் நடைபெற்றது. முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவ பத்மநாதன்; தலைமை தாங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணிஇ மோர் இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.       இந்த நிகழ்வில் ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வக்கொடி ராஜாமணி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் சூட்டு சாமி, கீலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், ஒன்றிய பிரதிநிதி தங்கராஜ், ஆலங்குளம் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால், முன்னாள் பேரூரா

சுரண்டை அதிமுக நகர செயலாளார் வி.கே.எஸ். 50 பிறந்தநாள் விழா: கேக் வெட்டி கொண்டாட்டம்

படம்
  சுரண்டை அதிமுக நகர செயலாளார்    வி.கே.எஸ்.  சக்திவேல் 50 பிறந்தநாள் விழா:      கேக் வெட்டி கொண்டாட்டம் ஆலங்குளம். மே. 9-     தென்காசி  மாவட்டம் சுரண்டை நகராட்சி அதிமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான வி.கே.எஸ். சக்திவேல் 50 வது பிறந்தநாள் விழா சுரண்டை காய்கறி மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது. புரட்சிதலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவப்படத்திற்கு வி.கே.எஸ். சக்திவேல் மரியாதை செலுத்தினார்.     ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் அமமுக செயலாளர் சுப்பிரமணிய பாண்டியன் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார். இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் உறவினர்கள், உள்பட பலர் மாலை மற்றும் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வி.கே.எஸ். இரண்டு கேக்குளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.           இந்த நிகழ்வில் அவைத்தலைவர் ஷேக் மைதீன், நகர பொருளாளர் கவுன்சிலர் வசந்தன், நகர துணை செயலாளர் எஸ்.கே. சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் பாலமுருகன்,  நகர மீனவரணி அருள் ஆனந்த், இளைஞரணி செயலாளர் ஆh.;சிவவசங்கர், மாவட்ட பிரதிநிதிகள் கே.ஆர்.கே. மாரி செல்வன். முத்த

குருவன்கோட்டை ஸ்ரீ மாரியமன் கோவில் கொடை விழாவையொட்டி மக்களுக்கு தடையின்றி குடிநீர்

படம்
  குருவன்கோட்டை ஸ்ரீ மாரியமன் கோவில் கொடை விழாவையொட்டி மக்களுக்கு தடையின்றி குடிநீர்  மாவட்ட ஆட்சியருக்கு ஆலங்குளம் பாஜக ஒன்றிய தலைவர் கோரிக்கை ஆலங்குளம். மே. 8-   தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய பாஜக தலைவர் கே.கே. பண்டரி நாதன் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருபதாவது.     தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ.மாரியம்மன் கோவில் கொடை விழா ஜூன் மாதம் 8ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த கொடை விழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பல்லாயிர கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.     குருவன்கோட்டையில் தற்போது தண்ணீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. கொடை விழா காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஒரு வாரத்திற்கு முன்னதாக எந்த வித தங்கு தடையின்றி  தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது. 

கீழச்சுரண்டையில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

படம்
  கீழச்சுரண்டையில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா சுரண்டை. மே. 7-  தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பாக, கீழச்சுரண்டை; கேபிள் டிவி அலுவலகம் முன்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.    இந்த விழாவிற்கு சுரண்டை நகர தலைவர் பாஜக தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார்.  முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் டி.கே.எம். மாதாள பாண்டியன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழஜூஸ் மோர் தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினார்.     பாரதிய ஜனதா கட்சி ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ப்ரியா ராஜ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கே.வி. கண்ணன், மற்றும ;சுரண்டை நகர பார்வையாளர் முருகேசன்;,ஜய்யாச்சாமி, ஓவியா என்ற சிவனனைந்த பெருமாள், மனோஜ்;, முருகன்; கோபால், தர்மராஜ், முத்துவைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் கேபிள் பவுன்ராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் செய்திருந்தனர். 

மருதம்புத்தூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

படம்
  மருதம்புத்தூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா ஆலங்குளம்- மே. 7        ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பாப்பாக்குடி ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல்; திறப்பு விழா நடைபெற்றது. பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ண முத்து தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சலருமான சங்கீதா சுதாகர் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழஜூஸ், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார். முன்னதாக பெருந்தலைவா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.        இந்த விழாவில் புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தலைவர் மாரியப்பன். கிளை செயலாளர் அருணாச்சலம், இளைஞரணி சுதாகர், உதயநிதி மன்றம் பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் சுந்தர், மகளிர் அணி அமுதா, ரேவதி பியூலா, வில்லிசை பரமேஸ்வரி, இளைஞரணி மாரியப்பன் வேலு, மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ், கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 96 சதவிகிதம் தேர்ச்சி

படம்
  பிளஸ்-2 பொதுத்தேர்வில்  ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 96 சதவிகிதம் தேர்ச்சி பிளஸ்-2 பொதுத்தோ்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் சரண்யா, லலிதா, யோகேஷ்வாி.  ஆலங்குளம். மே. 7-        பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 96 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 199 மாணவ மாணவிகளில் 191 பேர் முழு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் பள்ளியில் மூன்று மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். கம்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவில் மாணவி சரண்யா 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், அதே பாடப்பிரிவுகளில் மாணவி லலிதா 542 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும், மாணவி யோகேஷ்வரி 540 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3 வது இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.        பிளஸ்- 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி உதவி தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர். 

புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி 100% தேர்ச்சி:

படம்
  +2 பொதுத்தேர்வில்    புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி  100% தேர்ச்சி ஆலங்குளம். மே. 7    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.  புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாரோன் ஜெனிபா கணினி அறிவியல் பாடப்பிரிவில்   583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில்  முதல் இடத்தை பிடித்துள்ளார்,  கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி எ. டே ஃப்னி செல்வ மேரிசா 576 இரண்டாம் இடமும் மற்றும்  கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி லக்ஷியா  சரணி என்ற மாணவி 575 மதிப்பெண் பெற்று மூன்றாம்இடத்தை பிடித்துள்ளனர்.      கணினி அறிவியல் பாடப் பிரிவில் 8 மாணவ மாணவிகள்100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  பொருளியல் பாடத்தில் 1 மானைவி 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.     பிளஸ்-2 பொதுத்தோ்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும்  முதல்வர்  அருட்சகோதரி. செல்வராணி  மற்றும் அனைத்து  ஆசிரியர்கள் ஆசிாியைகள் பாராட்டினர்.

ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

படம்
  பிளஸ்-2 பொதுதேர்வில் சாதனை   ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி  100 சதவிகிதம் தேர்ச்சி ஆலங்குளம். மே. 7        ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.        தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று 6ம் தேதி வெளியானது. தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் 96.07 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 6 மாணவர்கள் 600க்கு 550 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 22 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 28 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.   பள்ளியில் கணிதம் கணித அறிவியல் பாடப்பிரிவு மாணவி சங்கமித்ரா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், அதே பாடப்பிரிவில் மாணவி சந்தியா, கணக்குபதிவியல், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் மாணவி ப்ரைசி சொர்ணா ஆகியோர் 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவத